விரைவில் திரைக்கு வரும் ‘TRAIN’… வெளியான முக்கிய அப்டேட்!

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டிரைன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்திருந்தது. இருப்பினும், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனை ஆகாதது உள்ளிட்ட சில வர்த்தக காரணங்களால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வந்தது.

தற்போது படத்தின் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது புதிய படம் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ திரைப்படமும் பல்வேறு சிக்கல்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கிடையில் திரைப்படங்களில் நடிப்பது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பயணங்களில் ஈடுபட்டு வரும் மிஷ்கினுக்கு, ‘டிரைன்’ திரைப்படத்தின் இந்த புதிய அப்டேட் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம்டாக்’ திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading