பிரதமர் மோடி மூன்று மணி நேரம் தான் தூங்குகிறார் – நடிகர் மாதவன் நெகிழ்ச்சி!

ஹிந்தியில் வெளியான ‘துரந்தர்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த மாதவன், தற்போது தமிழில் ஜி.டி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படம் மற்றும் அதிர்ஷ்டசாலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து மாதவன் பேசி ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ”பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். அவரது தாயார் கிராமத்தில் வசித்தவர். மோடிஜி குடும்பத்தினர் ஒருவர் கூட அரசு வேலையில் இல்லை. அவர் இந்திய நாட்டை பற்றி மட்டுமே 24 மணி நேரமும் யோசிக்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த தேச நலன் குறித்து யோசிப்பதும், இந்த நாட்டை எப்படி எல்லாம் வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லலாம் என்று தீவிர ஆலோசனையிலும் ஈடுபடுகிறார். அதோடு யாராக இருந்தாலும் எனது பாலிசிகளை விமர்சனம் செய்யலாம். என்னுடைய பாலிசி பிடிக்கவில்லை என்றால் என்னிடமே சொல்லுங்கள் என்றும் லோக்சபாவில் அவர் பேசுகிறார். இவர்தான் ஒரு நல்ல தலைவர். அதனால் நான் எப்போதுமே பிரதமர் மோடியுடன் நான் இருப்பேன். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே உண்டு” என்று நடிகர் மாதவன் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading