‘வெல்கம் டூ த ஜங்கிள்’ திரைப்படம் மூலம் தொடர் வெற்றியை பதிவுசெய்த நடிகர் அக்ஷய் குமார்!

ஹிந்தி திரையுலகில் ஒரு காலத்தில் வசூல் நாயகனாக திகழ்ந்த நடிகர் அக்ஷய் குமார், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து வெளியான ஆறு முதல் ஏழு திரைப்படங்கள் வரை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவற்றில் சில படங்கள் பெரிய அளவில் தோல்வியடைந்ததுடன், தயாரிப்பாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தரவில்லை.

அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த திரைப்படமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான ‘பூத் பங்களா’ அமைந்தது. சுமார் ரூ.120 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்து, அக்ஷய் குமாருக்கு மீண்டும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வெளியான ‘வெல்கம் டூ த ஜங்கிள்’ திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டும் நிலையில் இருப்பதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்திலும் வசூல் தொடர்ந்து உயர்ந்தால், அக்ஷய் குமாரின் அடுத்த வெற்றிப் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, திஷா படானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் அஹமது கான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading