அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், “காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். அவர் மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார். இந்தப் பேச்சுக்கு கூட்டத்தில் பங்கேற்ற ரசிகர்கள் பலத்த கர ஓலியுடன் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, சூர்யா அரசியலில் களமிறங்க உள்ளாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்தத நிலையில், சூர்யா நற்பணி மன்றம் நடிகர் சூர்யா அவர்கள் அரசியல் ஈடுபடவுள்ளார் என்ற தகவல் முற்றிலும் தவறு என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Add a Comment
