தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 84-வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் இருக்கும் காட்ரோட்டில் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Add a Comment
