பாகுபலி படத்திற்காக ஐந்து ஆண்டுகளை செலவிட்டேன் – நடிகர் பிரபாஸ்!

நடிகர் பிரபாஸை இந்திய அளவில் முன்னணி நடிகர்கள் வரிசைக்கு உயர்த்திய படம் பாகுபலி. இந்த படத்தின் இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அதிக சம்பளம் பெறுபவராகவும் மாறிவிட்டார் பிரபாஸ். தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார் பிரபாஸ். அதேசமயம், பாகுபலி படத்திற்காக செலவிடப்பட்ட அந்த ஐந்து ஆண்டுகளும் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் அதிகமான அழுத்தம் நிறைந்த காலங்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரபாஸ். பாகுபலி படத்தின் படப்பிடிப்பு மற்றும் கதாபாத்திரத்திற்காக உடல் அமைப்பை மாற்ற வேண்டிய சூழல் தன்னை தொடர்ந்து வேலை செய்ய வைத்தது என்றும், அதன் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகள் சரியான தூக்கம் இல்லாமல் சிரமப்பட்டேன் என்றும் கூறியுள்ள பிரபாஸ், அந்த படத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் மீது இருந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தனக்கு பெரும் சுமையாக இருந்தது என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading