கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல இன்புளூயன்சரான கல்யாணி!

சமூக வலைத்தளங்கள் மூலம் ஆடை நிறுவனங்களுக்கு இன்புளூயன்சராக இருந்தவர் கல்யாணி, ஒரு மில்லியன் பாலோயர்களை வைத்துள்ளார். பல இசை ஆல்பங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழில் ‘குட் நியூஸ்’ என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார்.இந்த படத்தை மூவிட்ரான் புரொடக்ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார், சாய்பிரபு ஜெயக்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த, நாகேந்திரமுருகன் இயக்குநராக அறிமுகமாகிறார். அஸ்வின் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும், ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சிந்துகுமார் இசை அமைக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading