கடந்த 2022-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், இன்று தனது தாயாருடன் திருப்பதிக்கு வருகை தந்த ஹன்சிகா, ஏழுமலையானை தரிசித்தார். கோவில் வளாகத்தில் அவரை கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். எளிமையான தோற்றத்தில் கோவிலுக்கு வந்திருந்த ஹன்சிகாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Add a Comment
