நடிகர் மனோகர் கிருஷ்ணா மகனின் திருமண விழாவில் சுந்தரி சன் டிவி தொடர் நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி பட்டியலில் அதிக நாள்கள் முதன்மை இடத்தில் இருந்த தொடர்களில் சுந்தரி தொடரும் ஒன்று. இந்தத் தொடரில் முருகன் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மனோகர் கிருஷ்ணா. இவர் மகனின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.இந்தத் திருமணத்தில் சுந்தரி தொடரில் நடித்த ஜிஷ்ணு மேனன், மின்னல் தீபா, அரவிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 2 வருடங்களுக்கு பிறகு திருமண நிகழ்வின் மூலம் நடைப்பெற்ற இந்த ரியூனியன் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add a Comment
