மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான்சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு.
Add a Comment
