திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி அசத்திய கிங் ஷாருக்கான்!

தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலேயின் மகள் ரேவதியின் திருமணம் மும்பையில் கோலாகலமாய் இரண்டு நாட்கள் நடைப்பெற்றது. சங்கீத் விழா முதல் திருமணம் வரை நீடித்த இந்த கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருமணத்திற்கு முன்னதாக, சங்கீத் விழாவின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவில், சங்கீத் விழாவின் போது ஷாருக்கான் தனது குச் குச் ஹோதா ஹை திரைப்படத்தின் பிரபலமான கோய் மில் கயா பாடலுக்கு நடனமாடி மணமக்களை மட்டும் அல்லாது விழாவிற்கு வந்தவர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading