ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ பட டீஸர்!

கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜீவா – ராஜேஷ் கூட்டணி மீண்டும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கும் ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பரிதாபங்கள் சுதாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று காலை 11 மணி 11 நிமிடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. டீசர் காட்சிகளை பார்க்கும்போது, இந்த திரைப்படமும் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு ஜாலியான கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகியிருப்பது தெரிய வருகிறது.

மேலும், ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய்க்கு, படக்குழுவினர் தங்களது முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலும் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading