படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்… நடிகை கஜோல் வேண்டுகோள்!

1992-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படம் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமான நடிகை கஜோல், இன்று நாடு முழுவதும் அறியப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழில் 1997-ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தார். அதன் பிறகு 2017-ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக நீண்ட காலமாக வலம் வரும் கஜோல், 51 வயதிலும் தனது தனித்துவமான நடிப்பாலும், கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

நடிகைகளுக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கஜோல், திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நிலைமைகள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களுக்கு கிடைக்கும் பல வசதிகளும், வாய்ப்புகளும் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. நான் சினிமா துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் நடிகைகளுக்கு பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது அந்த நிலை பெருமளவில் மாறி இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். நடிகைகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் உறுதியாக செய்யப்பட்டிருக்க வேண்டும். அது மிகவும் முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன்” என்று வலியுறுத்தினார். திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மரியாதை குறித்து கஜோல் தெரிவித்துள்ள இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading