அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியீடு!

நடிகர் அசோக் செல்வன் தனது 23வது திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார்.போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைக்க, அதிரடி காட்சிகளுக்காக பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார்.

காதல் மற்றும் ஆக்ஷன் இரண்டையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’, அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். வெளியான சிறிது நேரத்திலேயே டிரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading