‘ஏஸ்’, ‘மதராஸி’, ‘காந்தாரா சாப்டர் 1’ உள்ளிட்ட படங்களின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர் ருக்மணி வசந்த். சமீபத்தில் வெளியான ‘டாக்சிக்’ படத்திலும் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் அவர், கன்னடத்தில் உருவாகும் ‘மங்கள கவுரி’ படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ருக்மணி வசந்த் இதுவரை ஏற்காத வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அவர், போலீஸ் சீருடையில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கன்னடத்தின் சீனியர் நடிகை மாலாஸ்ரீயும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதையில் மாலாஸ்ரீ ‘மங்களா’ என்ற கதாபாத்திரத்திலும், ருக்மணி வசந்த் ‘கவுரி’ என்ற கதாபாத்திரத்திலும் தோன்றவுள்ளனர்.
—
