இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது இயக்கி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘வாரணாசி’. நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்து வரும் இந்த திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் கதாநாயகியான பிரியங்கா சோப்ராவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக அவர் நீச்சல் குளத்தில் நேரத்தை கழித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அந்த பதிவில், “ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக முடிந்தது. இப்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதோ, நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள இந்த நீச்சல் குள புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் அந்த பதிவுக்கு அதிக அளவில் லைக்குகள் மற்றும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
—
