கருப்பு படத்தின் மாபெரும் வெற்றி… ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளருக்கு கார் பரிசு அளித்த நடிகர் சூர்யா!

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்தின் இசையமைப்பாளராக இணைக்கப்பட்டார். புதிய இசையமைப்பாளர் என்பதால் அவர் எவ்வாறு இசையமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு, அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சாய் அபயங்கரின் இசை அமைந்தது என்று ரசிகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பு, ‘கருப்பு’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜி.கே. விஷ்ணு, நடிகர் சூர்யா பரிசாக வழங்கிய புதிய கார் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். தற்போது அதே மாடல் காருடன் இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “Love You Suriya Sir” என்று குறிப்பிட்டு நடிகர் சூர்யாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading