தென்னிந்திய அளவில் அதிக அளவில் வியாபாரம், வசூல் என இருப்பது தெலுங்குத் திரையுலகம்தான். அதன் மையமாக ஐதராபாத் செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவிலேயே ஏன் இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோவாக ஐதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி உள்ளது. அப்படிப்பட்ட ஊரில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர்கள் கூட இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்த ஏக்கம் தற்போது தீர்ந்துள்ளது. பிரபல தயாரிப்பாளரும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உரிமையாளருமான ஏசியன் சுனில் நரங் மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் கூட்டாக நடத்தும் ஏஎம்பி சினிமாஸ் சார்பில் புதிய ஐமேக்ஸ் தியேட்டர் உருவாக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் ஆர்டிசி கிராஸ் சாலையில் உள்ள சுதர்சன் தியேட்டரை புதுவடிவில் மாற்றியமைத்து அந்த ஐமேக்ஸ் தியேட்டர் உருவாக உள்ளது. இது தெலுங்குத் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Add a Comment
