‘கேஜிஎப் – 3′ உருவாக நீண்ட காலம் எடுக்கும்… இயக்குனர் பிரசாந்த் நீல் கொடுத்த அப்டேட்!

‘கேஜிஎப்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல். அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி, அந்த முன்னோட்டம் டிஜிட்டல் தளங்களில் பத்து கோடி பார்வையாளர்களை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தற்போது ‘டிராகன்’ திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளை இயக்குநர் பிரசாந்த் நீல் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரசாந்த் நீல், “டிராகன் படத்தை முடித்த உடனே, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ‘சலார் 2’ திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ‘கேஜிஎப் 3’ படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் மட்டுமின்றி நடிகர் யஷும் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக உள்ளோம். அதனால் ‘கேஜிஎப் 3’ திரைப்படம் தொடங்க இன்னும் நீண்ட காலம் ஆகலாம். அதைப் பற்றி முழுமையாக யோசிக்கவே இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்” என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading