கவனத்தை ஈர்க்கும் ‘பரிமளா & கோ’ திரைப்படத்தின் புதிய புரோமோ வீடியோ!

‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், அதன் பிறகு ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்தார். குடும்ப உணர்வுகள் மற்றும் நகைச்சுவை கலந்த கதைகளை ரசிகர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கும் திறமை கொண்ட இயக்குநராக அவர் பார்க்கப்படுகிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் பாண்டிராஜ் ‘பரிமளா & கோ’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன் மற்றும் அனந்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

முழுக்க முழுக்க நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்தன. இந்த நிலையில் தற்போது ‘பரிமளா & கோ’ திரைப்படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading