தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித், திரைப்படங்களைத் தாண்டியும் கார் ரேஸிங் உலகில் சர்வதேச அளவில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். நடிப்புக்கும், ரேஸிங்கிற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வரும் அவர், தற்போது தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை எப்போது தொடங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்த சில அரிய வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகும். அந்த வகையில் தற்போது அவர் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் விக்கெட் கீப்பிங் என கிரிக்கெட்டின் அனைத்து அம்சங்களிலும் அஜித் திறமையாக செயல்படுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக அவர் பந்துவீசும் விதமும், அதில் காணப்படும் ஆக்ஷன் ஸ்டைலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் ஸ்டைலான பேட்டிங் ஷாட்களையும் மிகவும் இயல்பாக விளையாடியிருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. விளையாட்டுகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது இதுவே முதல் முறை என்பதால், ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
