தன்னம்பிக்கை குறித்து அட்வைஸ் செய்த நடிகை பிரியா பவானி சங்கர்!

பிரபல நடிகை ப்ரியா பவானி சங்கர் பங்கேற்ற சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், அழகு, ஃபேஷன் போன்றவற்றில் தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம் எனக் கேள்வி கேட்கப்பட, அதற்குப் பதில் சொன்ன ப்ரியா, “80 சதவீதம் தன்னம்பிக்கை அடிப்படையில்தான் இயங்குகிறது. மற்ற எல்லாமே அதன் வழி வரக்கூடியவையே. இது எல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறக்கூடிய விஷயங்கள்தான். 30 வருடங்களுக்கு முன் இருந்த அழகு பற்றிய வரையறைகள் வேறு, இன்று உள்ள அழகின் வரையறைகள் வேறு. இனி வரப்போவதும் வேறு. ஆனால், தன்னம்பிக்கை என்பது நிரந்தரமானது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மைக்கூட உனக்கு இவ்வளவு போதும் என்பார்கள், சில நேரம் அது நம் நல்லதுக்காகக்கூட இருக்கலாம். ஆனால், நமக்கு என்ன சரி, எது தேவை என நாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading