யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘பெத்தி’ திரைப்படம்!

உப்பனா பட இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் ‘பெத்தி’. இதில் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதோடு பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. ஒரு விளையாட்டு வீரரின் கதையாக கிராமத்து ஸ்டைலில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 4ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தை தணிக்கை குழுவினருக்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். அவர்கள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அதோடு படம் 3 மணிநேரம் 9 நிமிடங்கள் நீளம் கொண்டதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading