அல்லு அர்ஜுனின் மகனுக்கு ஆர்சிபி வீரர் வெங்கடேஷ் ஐயர் அளித்த பரிசு!

அல்லு அர்ஜுனின் மகன் அல்லு அயான் தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அதிலும் குறிப்பாக பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிதான் எப்போதும் அவரது பேவரைட். காரணம் அதில் கேப்டனாக உள்ள விராட் கோலியின் தீவிர ரசிகர் தான் அல்லு அயான். கடந்த ஆண்டு பிரிமியர் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றபோது அல்லு அயான் தனது தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு அந்த வெற்றியை கொண்டாடிய வீடியோவை அல்லு அர்ஜுன் பகிர்ந்திருந்தார்.இப்படிப்பட்ட நிலையில் அந்த அணியைச் சேர்ந்த மிக முக்கியமான வீரரான வெங்கடேஷ் ஐயர், அல்லு அர்ஜுனை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின்போது அல்லு அயானுக்கு தனது கையெழுத்திட்ட சிறப்பு ஜெர்சியை பரிசாகவும் அளித்துள்ளார். தனது பேவரைட் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் தனக்கு பரிசளித்ததில் அல்லு அயான் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading