பின்தொடர்ந்த புகைப்பட கலைஞர்கள் டென்ஷன் ஆன சல்மான்கான்!

நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள பிரபலமான ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனக்கு நெருக்கமான ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்தார். அவர் மருத்துவமனைக்கு வந்ததை கேள்விப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் அவர் காரை பின்தொடர்ந்து வந்து மருத்துவமனைக்கு வெளியே சூழ்ந்து கொண்டனர். அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் பெயரை பாய் பாய் என்று கூறி சத்தமிட்டனர். இதனால் கோபமான சல்மான் கான் அங்கே கூடியிருந்த புகைப்படக்காரர்களை நோக்கி, உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? கொஞ்சம் கூட அறிவில்லையா? என்று ஆக்ரோஷமாக கத்தினார். மேலும், உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தால் நான் இப்படித்தான் வந்து கத்துவேனா? என்றும் கேட்டார். அவரது இந்த கோப முகத்தை பார்த்ததும் புகைப்படக்காரர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ எடுப்பதை நிறுத்தினார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading