உறுதியானதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி? வெளியான நியூ அப்டேட்!

சில மாதங்களுக்கு முன்பு, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்தின் 173வது திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், இந்த படத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி மற்றும் அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவரிடமும் ரஜினிகாந்த் தனித்தனியாக கதைகள் கேட்டதாக கூறப்பட்டது. இருவரின் கதைகளிலும் தனித்துவம் இருந்த நிலையில், எந்த கதை அவருக்கு மிகவும் பிடித்ததோ அதில் நடிக்க முடிவு செய்வார் என தகவல்கள் பரவின. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துதான் இயக்குவது உறுதியாகியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அடுத்த மாதத்திலேயே படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading