முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்திய தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்!

சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜய், தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் பதவியேற்றதிலிருந்து அரசியல், சமூக மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் அவரை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் இன்று (மே 15) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, திரைத்துறையுடன் தொடர்புடைய சில முக்கிய கோரிக்கைகள் மற்றும் நடிகர் சங்க கட்டடம் தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர்கள் முதல்வரிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading