ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ படத்தின் ‘தி ரேஜ்’ வெளியீடு!

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். ஆக்ஷன் கதாபாத்திரங்களில் தனது முத்திரையை பதித்துள்ள அவர், தற்போது அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுபாஷ் கே ராஜ், நடிகர் மற்றும் இயக்குநரான பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் நடிகை அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், ஆக்ஷன் மற்றும் எமோஷன் கலந்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கே.ஜி.எப்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இசையமைப்பாளர் ரவி பசூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து தற்போது ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் ‘தி ரேஜ்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading