மீண்டும் ஒரு டோலிவுட் படத்தில் நடிக்கும் யோகி பாபு!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் யோகி பாபு தற்போது ‘கருப்பு’, ‘ஜெயிலர் 2’, ‘அன் ஆர்டினரி மேன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் யோகி பாபு, பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து வெளியாகும் அவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

ஏற்கனவே தெலுங்கில் ‘சவுண்ட் வார்னிங்’, ‘குர்ரம் பாபி ரெட்டி’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ள யோகி பாபு, தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் ‘ராக்கா’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது யோகி பாபு மேலும் ஒரு புதிய தெலுங்கு திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

அந்த வகையில், ‘ரங்கபலி’ திரைப்படத்தை இயக்கிய பவன் பசம் ஷெட்டி இயக்கும் புதிய திரைப்படத்தில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு சினிமாவின் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சத்யாவுடன் இணைந்து யோகி பாபு இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading