‘வாழ’ பட இயக்குனரின் இயக்கத்தில் ‘ஹேப்பி லூப்’ என்ற படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர்!

கடந்த 2024-ஆம் ஆண்டு மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெளியாகிய ‘வாழ’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் பிரபலமான நடிகர்கள் இல்லாமல், புதிய முகங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் இயல்பான திரைக்கதையால் பெரிதும் கவனம் ஈர்த்தது. சிறிய படமாக வெளியானாலும், உள்ளடக்கத்தின் வலிமையால் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான விபின்தாஸ் கதை எழுதியிருந்தார். ஆனால், திரைப்படத்தை இயக்கியவர் ஆனந்த் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வாழ’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஆனந்த் மேனனின் அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது அவர் ‘ஹேப்பி லூப்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியரின் சகோதரரான மது வாரியர் மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading