இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா இணைந்து உருவாக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி, வரும் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் சூர்யாவின் முழுமையான வணிகத் திரைப்படமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இயக்குநர் ஆர்ஜே பாலாஜி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரைப்படத்தின் டிரைலர் தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை ரசிகர்கள் “மிகவும் சிறப்பான போஸ்டர்” என பாராட்டி வருகின்றனர்.
