இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்ட ஸ்ரீதிகா தற்போது இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். பி.ஆர்.ஜி. ஜெகந்நாதன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ், ஸ்ரீதிகாவே தயாரித்து இயக்கி வரும் திரைப்படம் ‘டே 11’ ஆகும். இந்தப் படத்தில் ஆதர்ஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் நாயகர்களாகவும், ஸ்வேதா அபிராமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும், ரவிச்சந்திரன், அபிமன்யு மற்றும் தமிழ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனில் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வா மேற்கொண்டுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீதிகா கூறுகையில், “ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இணைந்த ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாக ‘டே 11’ உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத ஒரு புதிய கருத்தை இந்த படத்தில் முன்வைத்துள்ளோம். ஒரு மர்மமான விளையாட்டுக்குள் நுழையும் கதாபாத்திரங்கள், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பரபரப்பான திருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடக்கம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லராக இந்த படம் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
