26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘தி லாஸ்ட் டெனன்ட்’ !

பாலிவுட் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்தவர் நடிகர் இர்பான் கான். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவரது இயல்பான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை காலத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.

2000ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘தி லாஸ்ட் டெனன்ட்’ திரைப்படம் சில காரணங்களால் வெளியிடப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படம் தற்போது நேரடியாக யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சர்தக் தாஸ்குப்தா இயக்கியுள்ள இந்த 43 நிமிடத் திரைப்படத்தில் நடிகை வித்யா பாலனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் திரையுலகில் பெரியதாக புகழ் பெறாத ஆரம்பகட்டத்தில் இந்த படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading