மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக ஷஷி சேகர் வெம்பட்டி நியமனம்!

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (சென்சார் போர்ட்) தலைவராக பிரசூன் ஜோஷி பதவி வகித்து வந்தார். உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக இருந்தவர். தணிக்கைக்கு வரும் திரைப்படங்களை பார்வையிட்டு சான்றிதழ் வழங்கும் இந்த சென்சார் போர்டின் தலைவராக 2017 முதல் பிரசூன் ஜோஷி இருந்து வந்தார்.இந்த நிலையில், திரைப்பட சென்சார் போர்டின் புதிய தலைவராக ஷஷி சேகர் வெம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 3 ஆண்டுகளோ அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ இந்த பதவியில் அவர் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading