300 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘கூலி’.அப்படத்தில் இடம் பெற்ற ‘மோனிகா’ பாடல் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய அந்தப் பாடல் அதன் இசைக்காகவும், பாடல் வரிகளுக்காகவும், பூஜாவின் அசத்தல் நடனத்துக்காகவும் ரசிகர்களைக் கவர்ந்தது.விரைவிலேயே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த அந்த லிரிக் வீடியோ பாடல் தற்போது 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 10வது பாடலாக இப்பாடல் உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading