50வது நாளை கடந்த ‘யூத்’ திரைப்படம்!

கென் கருணாஸ் இயக்குனராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்து வெளியான படம் ‘யூத்’. கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடம், குறிப்பாக இளம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக 82 கோடி ரூபாயை வசூலித்தது. அடுத்த சில நாட்களில் ஓடிடி தளத்திலும் வெளியானது. இருந்தாலும் கடந்த இரண்டு வாரங்களாக சில தியேட்டர்களிலும் இப்படம் ஓடி வருகிறது. தற்போது 50வது நாளையும் கடந்துள்ளது. அதற்கான சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது. இதனிடையே, இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பாடலான ‘முட்ட கலக்கி’ பாடல் யு டியூப் தளத்தில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading