தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள், மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தையும் புதிய திருப்பத்தையும் உருவாக்கியுள்ளன. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக), இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையை அடைந்துள்ளது.
முதல் முறையாகத் தேர்தலில் களம் கண்டிருந்த போதிலும், திமுக போன்ற முக்கிய கட்சியை பின்னுக்குத் தள்ளி விஜய் சாதனை புரிந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்வைத்த அவர், தற்போது தமிழகத்தில் தனித்துவமான முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்தத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை எட்டப்படாததால், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை விஜய் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் லெஜெண்ட் சரவணன் தனது கருத்தில், “விஜய் பெற்றுள்ள இந்த வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றியின் பின்னணியில் இளைஞர்களின் எழுச்சி மிகப்பெரிய காரணமாக உள்ளது. இந்த எழுச்சியை கண்டு இந்தியா முழுவதும் ஆச்சரியத்தில் உள்ளது. மக்கள் அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அவருடன் இருப்பவர்கள் இந்த ஆர்பி சவுத்ரி முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்ற ஒரு பொதுமக்கள் எழுச்சி இங்கு வெளிப்பட்டுள்ளது. தவெகவின் இந்த வெற்றி இந்திய அளவிலேயே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
