தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் ஆஷிகா ரங்கநாத், தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். ‘கிரேசி பாய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் ‘விஸ்வம்பரா’, ‘காதவைபவா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
தமிழில் அதர்வாவுடன் ‘பட்டத்து அரசன்’ மற்றும் சித்தார்த்துடன் ‘மிஸ் யூ’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஆஷிகா ரங்கநாத், தற்போது கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அவர் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேட்பதாக தெரிவித்த ஆஷிகா ரங்கநாத், அதற்கு எளிமையான விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய அழகின் ரகசியம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். நான் இயற்கையை நேசித்து ரசிப்பதால்தான் அழகாக இருக்கிறேன் என்று நம்புகிறேன். இறைவனும் இயற்கையும் எனக்குத் தந்த அழகை பாதுகாத்து வருகிறேன். அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இயற்கை மீதான அவரது நேசத்தையும் எளிமையான வாழ்க்கை முறையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
