நண்பா / சார் உங்களுடைய இந்த மிகப்பெரிய வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்… விஜய்யின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, விரைவில் முதல்வராக பொறுப்பேற்கும் நிலையை எட்டியுள்ளார். அவரின் இந்த வெற்றிக்கு திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கு ‘குஷி’ என்ற வெற்றிப் படத்தை வழங்கியதுடன், ‘மெர்சல்’, ‘வாரிசு’ போன்ற படங்களில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த அரசியல் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாரிசு’ படப்பணியின் போது “உங்கள் கையால் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை நான் விரைவில் பெறுவேன் சார்” என்று கூறியிருந்தேன். நான் கூறியதில் பாதி இப்போது நிஜமாகியுள்ளது. மீதியை நிறைவேற்றுவதற்காக, உங்களிடமிருந்து அந்த விருதைப் பெற நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது நண்பா / சார். உங்களுடைய இந்த மிகப்பெரிய வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்!” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading