‘மூக்குத்தி அம்மன் 2’ World of Mahasakthi’ வீடியோ வெளியீடு…இணையத்தில் வைரலாகும் காட்சிகள்!

நயன்தாரா நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமான ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜிக்குப் பதிலாக, இந்த முறை சுந்தர்.சி இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பில் இணைந்துள்ளனர். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் டிரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டிரெய்லர் வெளியானதும் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading