கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான மலையாளத் திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன் மூலம் மலையாளத் திரையுலகில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்நிலையில், கேரள மாநில முதல்வர் சதீஷன் இப்படத்தைப் பார்த்துவிட்டு, நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
Add a Comment
