ஹைப்பர்லிங்க் பாணியில் உருவான கிரைம் த்ரில்லர் படமான ‘மூன்றாம் கண்’ !

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி மற்றும் ராதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு திறமையான நடிகர்கள் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கே. சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக அஜீஸ் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை என்.எஸ். உதயகுமார் மேற்கொண்டுள்ளார். ஹைப்பர்லிங்க் பாணியில் உருவாக்கப்பட்ட கிரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் இந்த படம் உருவாகியுள்ளது.

தற்போது, ‘மூன்றாம் கண்’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், அதன் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading