நடிகை சிம்ரன் நடிக்கும் ‘டீச்சர்’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

1990களில் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நடிகை சிம்ரன், தற்போது புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் பாலு சர்மா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘டீச்சர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதையின் மையக் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘பிரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’ போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் சிம்ரன். முன்னணி கதாநாயகியாக இருந்த காலத்திற்குப் பிறகு, தற்போது கதையின் மையத்தை தாங்கும் கதாபாத்திரங்களையும், முக்கியத்துவம் வாய்ந்த துணை வேடங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது. இதன் மூலம், சிம்ரன் தனது நடிப்பு திறமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading