மியூசிக்கல் ஹாரர் கதைக்களத்தில் நடிக்கும் பிரேம்ஜி!

பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் கருப்பையா முருகன் தயாரித்து, இயக்கிய ‘வல்லமை’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் கவனத்தை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் பிரேம்ஜி வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தப்பட்டார். சமூகத்தில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம், பாராட்டுகளையும் பெற்றதுடன் சிந்திக்க வைக்கும் படைப்பாகவும் அமைந்தது.

இந்த நிலையில், கருப்பையா முருகன் மற்றும் பிரேம்ஜி கூட்டணி மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தை உருவாக்க உள்ளனர். இந்தப் படம் மியூசிக்கல் ஹாரர் வகையில், வித்தியாசமான கண்ணோட்டத்தில் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி இசையமைக்கிறார்.

இந்த புதிய படத்தையும் தனது பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் மூலம் கருப்பையா முருகன் எழுதி, இயக்கி, தயாரிக்க உள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. சமூக கருத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading