வெற்றி பாதைக்கு திரும்புவாரா ஷேன் நிகம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலங்களில் அவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், இந்த புதிய படத்தின் மீது அவருக்கும் ரசிகர்களுக்கும் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘பறவ’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘இஷ்க்’ போன்ற மலையாள திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் ஷேன் நிகம். தமிழில் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தற்போது ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குநராக இருந்த மார்டின் ஜோசப் இயக்கிய ‘ட்ரைடம்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 8-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இ4 என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ஜீத்து ஜோசப் வழங்குகிறார். இதில் சானியா ஃபாதிமா, சோபி திலகன், கிருஷ்ண பிரபா, கோட்டையம் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷேன் நிகம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பல்டி’, ‘ஹால்’ போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், இந்த ‘ட்ரைடம்’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading