மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவுள்ள ‘ராஜா சிவாஜி’ !

நடிகை ஜெனிலியா தயாரிப்பில், அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக் எழுதி கதாநாயகனாக நடித்துள்ள மராத்தி திரைப்படமான ‘ராஜா சிவாஜி’ வருகிற மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், வித்யா பாலன், மகேஷ் மஞ்ரேக்கர், ஜெனிலியா, பர்தீன் கான், பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், பொமன் இரானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்த படம், மும்பை, சதாரா, வாய், மகாபலேஷ்வர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மராத்தி திரையுலகில் இதுவரை உருவான மிக உயர்ந்த செலவிலான திரைப்படமாக இது குறிப்பிடப்படுகிறது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

17ஆம் நூற்றாண்டில் மராத்திய பேரரசின் வீரமிகு மன்னனாக விளங்கிய சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. முகலாய பேரரசு, பீஜாப்பூர், அகமது நகர் சுல்தான்கள் ஆகியோருக்கு எதிராக போராடி இந்துக்களின் சுயாட்சிக் கொள்கையை நிலைநிறுத்தியவர் அவர். அவரின் கொரில்லா போர் உத்திகள் உலக வரலாற்றில் இன்றளவும் பேசப்படும் முக்கிய அம்சமாகும். மத நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்றவராக இருந்த அவர், தனது 16 வயதிலேயே போரில் இறங்கி முதல் வெற்றியைப் பெற்றவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியதே ‘ராஜா சிவாஜி’ திரைப்படம்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading