‘ராக்கா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகள் குறைக்கப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன?

இயக்குநர் அட்லீ தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிக உயர்ந்த பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சமீபத்திய ஹாலிவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் அல்லு அர்ஜுனுக்கு இணையான முக்கியத்துவம் நடிகை தீபிகா படுகோனுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரமும் படத்தின் மையக் கூறாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தீபிகா படுகோன் தனது கர்ப்பத்தைக் குறித்து அறிவித்த நிலையில், ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு எவ்வாறு நடைபெறும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால், அதற்கான விளக்கமாக, படத்தில் அவரது காட்சிகள் எதுவும் குறைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சண்டைக் காட்சிகளில் மட்டும் பாடி டபுள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், மற்ற அனைத்து காட்சிகளிலும் தீபிகா நேரடியாகவே நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading