இந்திய சினிமாவின் முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய திரையுலகைச் சேர்ந்த சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேசிய விருதுகளைப் பெற்றனர்.
2024-ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை 18-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை, கேப்டன் மில்லர்’ படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகராக தேசிய விருதை பெற்றார். மேலும், தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. ‘கேப்டன் மில்லர்’ சமூக மாற்றத்திற்கான திரைப்படப் பிரிவிலும் அங்கீகாரம் பெற்றது.
‘மகாராஜா’ படத்தில் நடித்த சாச்சனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும், அதேபோல், ‘மகாராஜா’ படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த அனல் அரசு சிறந்த சண்டை பயிற்சி இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அமரன் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றனர்.














இந்த விழாவில் மலையாள படமான பிரம்மயுகம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்முட்டி பெற்றார்.மேலும்.‘பிரம்மயுகம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெகனாத் ஜலால் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றார். பாடகி வைக்கம் விஜயலட்சுமி ஏஆர்எம் படத்தில் அங்கு வானில் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றார் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி சிறந்த வசனகர்த்தா விருதை லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்காக பெற்றார்.
இவ்விழாவில் தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 78 வயதான அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’ படத்தில் கதையை விவரிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
