ஃபஹத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன்டசி திரைப்படம் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. மேஜிக் கலைஞராக ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள இப்படத்தில், அவருக்கும் சாராவுக்கும் இடையிலான சுவாரஸ்யமான பயணத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அக்டோபர் 2ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழ் பதிப்பின் டிரெய்லருக்கு நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்திருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
