‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. அந்த நிலையில், அவர் ‘வித் லவ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் வெற்றி பெற்றுள்ள அபிஷன் ஜீவிந்த், தனது திறமையை மேலும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் கதாநாயகனாக ஒரு புதிய திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாலமுருகன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப் புதிய படத்தில் அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து, இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணி குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
